முதுகு எலும்பு
மனித முதுகு எலும்பு ஆரோக்கியமாய் இருந்தால் தான் அவனால்
நிமிர்ந்து உட்காரவே நன்றாக நடக்கவோ முடியும் . முதுகு எலும்பு
ஒரு எலும்பால் ஆனது அல்ல . வளையம் போன்ற
33துண்டுகலளால் ஆனது .
இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12
எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு
பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த
நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள்
சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்)
அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள்
அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும்
இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க்
பகுதி அமைந்துள்ளது.
இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள
பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில
வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும்
தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள்
முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக
வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட
வைக்கிறது.”
உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடும்போது, தாவும்போது,
தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச்சுமையாக
தூக்கும்போது, குனியும் போது, நிமிரும் போது, வளையும்போது,
நெளியும் போதும் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தையும், இந்த
`டிஸ்க்’ தான், தாங்கிக்கொண்டு குருத்தெலும்புகள்
பாதிப்படையாமல், உடைந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.
அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக,
இஷ்டம் போல் இருநூறு கிலோ எடையைத் தூக்கி தலையில்
வைத்தால், இந்த `டிஸ்க்’ தாங்காது.
ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து
குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா
செயல்களிலுமே, ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த
`டிஸ்க்’கால் கண்ட்ரோல் பண்ணி, உடம்பை பாதுகாக்க முடியும்.
அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்’கால் ஒன்றும் செய்ய முடியாது.
மனித உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டதல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள
ஆன்னுலஸ் பைபரில், சுமார் 65 சதவீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில்,
சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப்ளை இந்த
டிஸ்க்குகளுக்குக் கிடையாது.
வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக்கிலுள்ள
நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக